Thursday, March 13, 2014

Together as One [ 08.Jul.2010 -16.Mar.2014]



எங்கிருந்தோ வந்தோம்
கல்லூரியெனும் விருட்சத்திற்கு
வாழ்க்கைப் பயணத்தில்
மூன்றாண்டுகள் இளைப்பாற !

நாம் சேந்திருந்து
அரட்டை அடித்த
நாட்கள் ஆயிரம்... ஆனால்
பிரிந்து செல்கின்ற போது
வாழ்க்கை எனும் பாடம்
கற்றுக்கொடுத்தது
பிரிவின் வலிகளை...

இடைவெளி இன்றி ஒவ்வொரு
இடைவேளையும் அடித்த லூட்டி
கண்ணை சொருகும், வகுப்பு நேரங்களில்
குறும்புடன் படித்த துண்டு சீட்டு செய்திகள்..

நண்பா என்றழைத்து
நட்பை பரிமாறினோம்
ஒன்றாய் வேறுபாடில்லாது
பார்த்து ரசித்தோம் !

ஆசிரியர் நடத்திய
பாடத்தை விட
நாம் பேசிய
வார்த்தைகளே அதிகம் !

நம்பெற்றோர் ஒன்றாய்
சம்பாதிக்கவில்லை யென்றாலும்
நாம் ஒன்றாய்
சேர்ந்து செலவழித்தோம் !

ஒன்றாய் உணர்வருந்திய உல்லாசமும்
 இவைகளுக்கு எல்லாம் காலம்
 முற்றுபுள்ளி வைக்கலாம்
 நம் கனவுகளுக்கும் நினைவுக்கலுக்கும் அல்ல !

மரங்களுக்கு மரணம்
இலையுதிர்க்காலமல்ல ...
நம் உறவுக்கு மரணம்
இந்தப் பிரிவுமல்ல ....

Together as One Forever.....